Ad Widget

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணம்- ரஹ்மான்

மணிரத்னத்துடன் 25 வருடம் பயணிப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று ரஹ்மான் பெருமிதம் கொண்டுள்ளார். ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு, மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‛காற்று வெளியிடை’. கார்த்தி, அதிதி ராவ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராணுவ பின்னணியில், ஒரு அழகிய காதல் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரோஜா படம் முதல் தற்போது வெளியாக உள்ள காற்று வெளியிடை வரை மணிரத்னத்தின் அனைத்து படங்களுக்கும் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இந்தாண்டோடு இவர்களது கூட்டணி 25 வருடத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்…

மணிரத்னம் உடன் 25 வருடங்கள் பயணித்து வருகிறேன், மிகச்சிறந்த அனுபவம். அவர் இல்லாவிட்டால் வைரமுத்து மாதிரி ஒருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்திருக்காது. அவரின் படத்தில் வேலை பார்ப்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். இவ்வளவு ஆண்டுகள் தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் பேசும்போது…

‛‛ரஹ்மானை நேற்று தான் சந்தித்து மாதிரி உள்ளது. ஆனால் 25 வருடமாகிவிட்டது. அன்று பார்த்தது போன்று இன்றும் அதே புன்னகையுடன் இருக்கிறார். தற்போது அவர் வேறு ஒரு உயரத்திற்கு சென்றுவிட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போது ஒரு புதிய பாதையை தேடுவார் ரஹ்மான். இந்த நேரத்தில் வைரமுத்துவுக்கும் நன்றி சொல்கிறேன். நீங்கள் இருவரும் எனக்காக 25 வருடங்கள் பொறுமையாக இருந்தீர்கள், இன்னும் கொஞ்சம் காலம் அந்த பொறுமையை கடைபிடியுங்கள். இந்த காற்று வெளியிடை படம் இந்திய விமானப்படையின் பின்னணயில் சொல்லப்பட்ட ஒரு அழகிய காதல் கதை” என்றார்.

சூர்யா பேசும்போது…

‛‛காற்று வெளியிடை படத்தில் கார்த்தியின் லுக் வேற லெவல். இதுமாதிரி தோற்றத்தில் அவரை பார்த்தது கிடையாது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு இது கார்த்தி தானா என்று ஆச்சர்யப்பட்டேன். மணிரத்னம் படத்தில் தான் இதுமாதிரி நடக்கும், இதுவரை பார்க்காத ஒரு கார்த்தியை ரசிகர்கள் பார்ப்பீர்கள் என்றவர், எப்படி இதுபோன்று படம் இயக்க உங்களுக்கு ஐடியா கிடைக்கிறது என்று மணிரத்னத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டார் சூர்யா.

Related Posts