காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்: தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வயது முதிர்ந்த தாய் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 நாட்களாக முன்னெடுத்து வரும் குறித்த போராட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக குறித்த தாய் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, விஷேட அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த மற்றும் காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு இம் மக்கள் இரவு பகலாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts