“சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை”

யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர...

ஆலயத்திற்குள் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது

தெல்லிப்பழை, பன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றில் மறைந்திருந்து மது அருந்திய நால்வரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் மது அருந்துவதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வாகன சாரதிகள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நால்வரும் ஆலயத்தோடு தொடர்பு...
Ad Widget

கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர், பொரளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அத்துடன், அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும்...

இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நியமனம்

யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு 6 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே, மகேஸ்சேனாநாயக்கவுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; மனோ

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு...

மடு பிரதேசத்தில் பெருந்தொகையான காணி ராணுவத்தின் வசமுள்ளது

மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதாக மடு பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு எனும் அமைப்பானது, குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தருமாறு கோரி தகவல்...

விமல் வீரவன்சவின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தனக்கு பிணை வழங்க கோரி நேற்று (புதன்கிழமை) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவில் இருந்த போது, 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதனால் அரசாங்கத்திற்கு ரூபா...

பன்னங்கண்டியில் ஆரம்பமானது மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி – பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்கள் முன்னெடுத்துவந்த போராட்டம் தீர்வுடன் முடிவுற்றிருக்கும் நிலையில், தற்போது அங்குள்ள வேறு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காணி உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரஸ்வதி கிராமம் மற்றும் ஜொனி குடியிருப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆரம்பித்த இப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும்...

தெஹிவளையில் தமிழ் மாணவர்கள் கடத்தல்; விசாரணைகளை நிறுத்துமாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தம்!

தெஹிவளையில் தமிழ் மாணவர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு...

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல்! ஐவர் பலி!

பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டணில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திலே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி மற்றும் பெண்னொருவர் உட்பட 5 பேர்...

வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஸ்ரீலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுமே முக்கியமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா தொடர்பிலான அறிக்கையை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக முன்வைத்து உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என பிரிவுகள்...

புங்குடுதீவு மாணவி கொலை: விசாரணைகள் 98% நிறைவு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (22) தெரிவித்தார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...

2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான செயலமர்வு

2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திகள் கண்காட்சி இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியின் திறப்பு நிகழ்வில்...

பெருந்தொகை போதைப் பொருளுடன் இலங்கை யுவதி கைது

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கை யுவதி ஒருவர் இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் வசம் இருந்து 64 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து பெங்களூக்கு சென்ற குறித்த 39 வயதான யுவதி, சென்னை நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

ஏப்ரல் 10 யாழில் பிரமாண்ட விழா! ரஜனிகாந் உள்ளிட்ட 2.0 திரைப்பட குழு யாழ்ப்பாணம் வருகிறது!

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த நடிக்கும் 2.0 திரைப்படத்தின் ரீசர் வெளியீட்டு விழாவில் எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறுவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரமாண்ட நிகழ்வு இசை நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்வில் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2.0...

ஐ.நா ம உ பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா தொடர்பான அறிக்கை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற கேள்வி பதில் அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினால் ஐ.நா ம உ பேரவை ஆணையாளரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் கருத்துக்களும். ஐநா மனித உரிமை பேரவையின் 34 வது அமர்வில் நடைபெற்ற ஐநா...

வடக்கின் மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு அனுபவங்களை அறிந்துகொள்ள வெளிநாட்டினர் வருகை

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றாடல் மதிப்பீட்டில் இருந்து அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக ஐவரி கோஸ்ற் மற்றும் நேபாளம் நாட்டில் இருந்து உயர் மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை (21.03.2017) யாழ் பொதுநூலகத்தில் அமைந்துள்ள வடமாகாணசபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றுள்ளது....

‘ஆவா குழு’ நாடு முழுவதிலும் தலைமறைவாகி உள்ளனர் : பொலிஸ்

யாழ். குடா நாட்டை ஆட்டிப்படைத்த ஆவா குழுவினர் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த ஆவா குழுவினர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி நாட்டின் பல பகுதிகளிலும் தலைமறைவாகி உள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்தில் இயங்கும் ஆவா குழுவைப் போன்று...

அச்சுவேலி முக்கொலை தொடர்பில் நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு

அச்சுவேலி முக்கொலை வழக்கின் தொடர் விசாரணையை அடுத்தவாரம் ஆரம்பிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்றையதினம் யாழ். நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வசித்து வந்த தனஞ்சயன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே...

பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலான குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்...
Loading posts...

All posts loaded

No more posts