Ad Widget

கடந்த இரண்டு மாதங்களில் 55 HIV நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் 2017, கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 55 பேர் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த எச்.ஐ.வி பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் ஆண்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்.ஐ.வி பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு எச்.ஐ.வி. நோய் இருப்பதால் அவருடைய மகளை பாடசாலையில் இணைத்துக்கொள்ள பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாகவும் குளியாபிட்டிய பகுதில் தாயிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறி, மகனை பாடசாலையில் இணைத்துக்கொள்ள மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts