- Sunday
- June 14th, 2026
வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள்...
பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி...
உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும், சுயலாப அரசியலுக்காவும் தமிழகத்தில் சிறு கட்சிகள் உணர்ச்சிப் பொங்க பேசிவருவதாக பிரபல தென்னிந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியாசாலையில்...
மானிப்பாய் பொன்னாலை வீதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீடு புகுந்த இனம்தெரியாத குழுவினர் வாள் முனையில் 19 வயது யுவதியினை கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பொன்னாலை வீதியில் உள்ள வீட்டிற்குள் இரவு 9 மணியளவில் ஓர் கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குழு...
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது....
முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான் என இயக்குனர் பாலா விக்ராந்தை பாராட்டியுள்ளார். சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். இந்த படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும்போது, நான் இங்கிருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன்....
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தை பார்த்து வியந்த ரஜினி, அவருக்கு தன்னை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த படத்தையும் சிறப்பாக இயக்கி ரஜினி மனதில் இடம்பிடித்தார் ரஞ்சித். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்துள்ள ரஜினி, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் கேங்ஸ்டர் படமான பாட்ஷா...
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பால் கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் அது தொடர்பான நடைமுறைப் பிரச்சணைகளுடன் அதற்கான நிதியீட்டல்கள் தொடர்பினில் ஆராயப்படவுள்ளது. குறித்த...
அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். யாழ்.சிறைச்சாலையில்...
ஏவிளம்பி புத்தாண்டை கறுப்புக் கொடிகள் ஏற்றி கறுப்பு தினமான அனுஷ்டித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டனர் மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கும் கறுப்பு புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை கவனத்திற்கொண்டு தமக்கான உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறும் வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், கடந்த...
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...
ஏவிளம்பி புத்தாண்டை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் உட்பட படையினர் வென்றெடுத்த வெற்றியை நிலைபெறச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிறந்துள்ள ஏவிம்பி புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் காணிகளை மீட்பதற்கும், காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்துதருமாறு கோரி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின்...
உந்துருளியொன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் நேற்று பிற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வீதியில் இருந்து குறித்த மூவரும் ஒரு உந்துருளியில் தலைக்கவசம் அணியாது பயணித்துள்ளனர். குறித்த மூவரையும் கண்ட காவல்துறையினர் வீதியில் மறித்துள்ள வேளையில், நிற்காது தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள்...
மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. குப்பைமேடு சரிந்துவிழுந்ததில், 17 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரை மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 13 வயதான பாடசாலை மாணவியும், 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள்...
இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...
வடமாகாணத்தின் பல பகுதிகள் வறட்சியினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தீவகப் பகுதிகள் மார்ச் மாதத்திலேயே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்துடன் ஒப்பிடும்...
குடும்ப பிரச்சினை கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐந்து மாடி குடியிருப்பு, கடற்கரை வீதி, குருநகர் பகுதியினை சேர்ந்த மகிபாலன் நெல்சன் (வயது 38) என்பவர் வயிற்றில் குத்துக் காயங்களுக்குள்ளான...
Loading posts...
All posts loaded
No more posts
