ஜனாதிபதியின் புத்தாண்டு உரை தொடர்பில் தமிழ் மக்கள் அதிருப்தி!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் உட்பட படையினர் வென்றெடுத்த வெற்றியை நிலைபெறச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிறந்துள்ள ஏவிம்பி புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் காணிகளை மீட்பதற்கும், காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்துதருமாறு கோரி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் எதுவும் கூறாது, மீண்டும் போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தனது உரையில்…

கமத்தொழிலின் சம்பிரதாயங்கள் நவீன மயமாகியுள்ள இக்காலப்பகுதியிலும் சௌபாக்கியத்தை அடிப்படையாக கொண்ட சித்திரைப் பிறப்பைக் கொண்டாடுவதானது எம் மனங்களில் காணப்படும் ஆன்மீக கலாசாரத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுவதாக சித்திரைப் புத்தாண்டு அமைந்துள்ளது.

மனிதனின் செய்நன்றி மறவாத குணத்திற்கும் நிதர்சனமாகவே புத்தாண்டுப் பாரம்பரியங்கள் அமைக்கின்கின்றன. அத்தோடு தனது வாழ்க்கைக்கு வலுவூட்டிய சுற்றாடலுக்கு மனிதர்களால் செலுத்தப்படும் நன்றிக்கடனைப் போலவே சமூகங்களுடன் ஏற்பட்டிக்கும் நெருங்கிய தொடர்புகளை இற்றைப்படுத்தலும் புத்தாண்டு சம்பிரதாயங்களினால் உறுதிப்படுத்தப்படுகின்றது.

புத்தாண்டு பஞ்சாங்கம் மூலம் அதற்கான கால அட்டவணை வழங்கபடுவதன் ஊடாக நேர முகாமைத்துவத்திற்கும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள் முன்னுரிமை வழங்குவதாக அமைக்கின்றன. பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்தும் பழமைவாத போக்கிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக உருவாக வேண்டும் என்பதே சித்திரரைப் புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு புதிய சிந்தனைகளுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக காணப்படுகின்றது. ஆகையால் வென்றெடுத்த வெற்றியை மேலும் நிலைபெறச் செய்வதுடன், நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவோம் என மலந்துள்ள இந்த புத்தாண்டில் உறுதி கொள்வோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் சகல மக்களுக்கும் சௌபாக்கியம் சமாதானம் மற்றும் மகிழச்சி நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக..

இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நில மீட்புப் போராட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுப்பிடித்துத் தருமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாமை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பேணும் நாடாக ஸ்ரீலங்கா எழுச்சி பெற வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது அவர்களை உதாசீனம் செய்துள்ளதன் ஊடாக எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts