- Wednesday
- September 10th, 2025

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது....

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10...

பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ”மாணவர்களின் வாய்பகுதியைச் சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்துக்...

800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும்,...

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை...

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று (17) கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதனையடுத்து, இந்திய கடற்றொழிலாளர்களை...

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் 6,700 இராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப்படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 இராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 930 இராணுவ வீரர்களை இழந்து...

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்துறை சுருவில் ஐயனார் கோவில் பூசகர் ஆலய மூல விக்கிரகமான ஐயனார் மற்றும் பரிவார மூர்த்தி விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர...

கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி...

கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....

யாழில் கடந்த 2 நாட்களில் மூன்று முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி, பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த முதியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில்...

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கு இந்த தீர்மானம் வழிவகுக்கும் என அந்த தீர்மானத்தின்...

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை...

அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித்திடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

யாழ்.கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் வழங்க முற்பட்டால் அதனை பெற்று சைவ சமயத்தின் சாபத்துக்கு ஆளாக எவரும் விரும்பக்கூடாது என்று தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம்...

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காற்றுச் சுழற்சியானது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் இதன் நகர்வுப் பாதை...

‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பக்றீரியாவால் காற்றுவழியாக பரவுவதாகவும், இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகளாக சளி, காய்ச்சல் மற்றும் லேசான இருமல் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுக்...

All posts loaded
No more posts