Ad Widget

வெப்பநிலை உயர்வு : தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார்.

வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய் சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு மருந்து விசிறும் 20 லிட்டர் கொள்கலனின் கலந்து விசுறுவதன் மூலம் வெள்ளை ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும் என வட பிராந்திய தென்னை பயிற்சிக்கு சபையின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

வெள்ளை ஈயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனை ஊடாக தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் உதவி தேவைப்படுபவர்கள் விவசாய திணைக்களத்தினை தொடர்பு கொண்டு மருந்து விசிறுவதன் ஊடாக நோயினை கட்டுப்படுத்த முடியும் என தென்னை பயிற்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

Related Posts