யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி – டக்ளஸ்

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது....

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு விவகாரம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு!!

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான...
Ad Widget

பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து ஊடகவியலாளர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், அதன் முகாமைதுவ பணிப்பாளருமாண சாந்தலிங்கம் வினோதன் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வல்லிபுரம் குருக்கட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டுவரும் அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலர்...

ரஷ்ய போர்க்கப்பலை தகர்த்த உக்ரைன் விமானப்படை

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவிகளை செய்து வருகின்றன. மேலும் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன்...

காஸாவில் 8000 குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேல் இராணுவம் காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை உயிர் இழந்தவர்களின்...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு பொருந்தும் என...

ஜனாதிபதியை சந்திக்க வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு : சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி.

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச்...

வடக்கு – கிழக்கில் பலத்த மழைக்கான சாத்தியம்!!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பாஸ் (PASS) நடைமுறை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதன் காரணமாக செவ்வாய்கிழமை (19) தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (PASS) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்....

போதை மாத்திரை, லேகிய பொதிகளுடன் யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர் கைது!!

போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய...

யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரத்தை காணவில்லை!!

யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள்...

யாழ். மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில்...

ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி...

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் ஒன்றை...

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!! நேற்று மட்டும் 111 டெங்கு நோயாளிகள்!!

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் அதிகமானதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ஆம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,866 குடும்பங்களை சேர்ந்த 5,588 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில்...

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம்...

யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் 71 குடும்பங்களை சேர்ந்த 252 பேர் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10...

வட மாகாண ஆளுநரின் அதிரடி பணிப்புரை!

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 100 க்கும் மேற்பட்டோர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts