Ad Widget

எரிபொருட்கள் விலைகளில் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 ரக மற்றும் டீசல் ஆகியனவற்றின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 371 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், டீசல் லீட்டர் ஒன்று 363 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts