இரத்த மழை தொடர்பில் எச்சரிக்கை!!

ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியாவால்(UK) எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அந்த நிகழ்வின் காரணமாக, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம்...

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத் திருடி சென்றவரைப் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு , மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய வேளை தனது...
Ad Widget

கார்த்திகை பூ அலங்கார விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப்பட்ட இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது, கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் ஆசிரியர்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார். கேகாலையில்(Kegalle) நேற்றையதினம்(07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரச ஊழியர்களின் நலன் கருதி சம்பளத்துடன் 10,000 ரூபாய்...

வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை...

உலகில் இன்று ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்!

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்( Total Solar Eclipse) தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது மிகவும்...

நாட்டின் மீது பற்றுவைத்த சிறுவன்: உக்ரைன் இராணுவம் வழங்கிய அங்கீகாரம்

ரஷ்யா - உக்ரைன் (russia - ukraine)இடையிலான போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நாட்டின் மீது வைத்த பற்றை அந்நாட்டு இராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், போர் தீவிரமடைந்துள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன்...

வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு...

மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே,...

மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம...

இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு!

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, வியாழக்கிழமை (05) அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில்...

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு...

இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட...

யாழ். மத்திய பஸ் நிலைய நெருக்கடியை நீக்குவதற்கு நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பஸ் நிலையத்திற்கு நேற்று (03) புதன்கிழமை விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் துறைசார் அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடியிருந்தார் . இதன் தொடர்ச்சியாக இரவு, தனது அலுவலகத்தில் துறைசார்...

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த அறுவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி...

போலி வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தீர்மானம்!

இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில்...

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனுடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு!

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை (3) மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு...

யாழில் இன்று முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறை!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று (03) முதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், தொலைபேசிகளை பேசியப்படி...

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும்...
Loading posts...

All posts loaded

No more posts