- Tuesday
- May 19th, 2026
‘கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி’ க.ஜெயவனிதா புலனாய்வுத்துறையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த சங்கத்தின் தலைவியின் காணாமல் போன மகள் ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற...
மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று...
பிரசவத்துக்குப் பின்னர், ஒருவருட காலத்துக்கு, தாதியர்களுக்கு இரவு கடமையை இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும், தாதியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை, புதிய தாதியர் வித்தியாலயத்துக்கான எட்டுமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை, நேற்று (05) நாட்டி வைத்த...
2016ம் ஆண்டில் தேசிய கல்வியல் கல்லூரிக்கு தகுதி பெற்ற விண்ணப்பதார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைவாக 2016ம் ஆண்டு தேசிய கல்வியல் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்காக தகுதி பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர் பட்டியலில் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்....
இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை சந்தையில் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் கேட்ட போது இந்த பிரிவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் இது குறித்து...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக கடமையாற்றிய சகல போராளிகளும் எந்தவித ஆயுத கலாசாரமற்ற ஜனநாயக ரீதியில் ஜனநாயகப் போராளிகளாக மீண்டும் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க ஒரு குடையின் கீழ் அணி திரண்டு ஜனநாயகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள் என ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில்...
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வட. மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் பொன். சிவகுமாரனின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று...
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அச்சுவேலியை சேர்ந்த பிரதீபன் என்பவரே தனக்கு பொலிஸ் நிலையத்தில் வேலைவேண்டும் என போராட்டத்தில்...
தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு...
யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு...
வடக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஈ.ஆர்.எல் பெர்னாண்டோ காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடனும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடனும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது...
கடந்த தினங்களில் நந்திக்கடல் களப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டுவாகல் களப்பில் பல்வேறு வகையான மீனினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் நிலவிய கடும் வறட்சியே அதற்கான காரணம் என மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வறட்சியான காலநிலையில் களப்பு மற்றும் கடலுக்கு இடையிலான தொடர்பு...
தென்மெற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும், நாட்டின் ஏழு மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும்...
பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் சைகோ கமலின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. எனினும் வசூலில் இப்படம் நல்ல வரவேற்பை...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது...
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேற்றய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ரோகித்...
இலங்கை அணி வீரர் உப்புல் தரங்க சம்பியன் ட்ராபி தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்த அணியின் தற்போதை தலைவரான அவர், நேற்று முன்தினம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்து வீச்சுக்காக அதிக நேரத்தை வீணடித்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை அணி 50 ஓவர்கள் பந்து...
பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது...
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். நீர் பாதுகாப்பு என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி...
Loading posts...
All posts loaded
No more posts
