காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தலைவியிடம் புலனாய்வாளர்கள் விசாரணை!

‘கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி’ க.ஜெயவனிதா புலனாய்வுத்துறையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குறித்த சங்கத்தின் தலைவியின் காணாமல் போன மகள் ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற ஒளிப்படம் சர்வதேச ரீதியாக பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவி புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் க.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடன் எனது மகள் நிற்பது போன்ற ஒளிப்படம் தொடர்பாகவும் அவர் கற்கும் காலப்பகுதியில் கல்வி சுற்றுலா சென்றமை உட்பட காணாமல் ஆக்கப்பட்ட மகள் தொடர்பான பூரண விபரத்தினை பெற்றுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts