குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்களும், வாக்குமூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்!

வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். நேற்றயதினம்...

யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

சேவையின் நிமித்தம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சஞ்ஜீவ தர்மரட்ன, கொழும்புக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். கடந்த வருடம் ஜீலை மாதம் முதல், தற்போது வரையான காலப்பகுதி வரை, யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், புதிய பிரதி பொலிஸ்மா...
Ad Widget

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...

முரளிதரனுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முரளிதரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதன்...

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: சம்பிக்க ரணவக்க

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...

காங்கேசன்துறையில் போதைப் பொருள் மீட்பு!

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் வைத்து ஹெரோயின் போதைப் பொருட்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பின்போது, 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையை அவதானித்த கடத்தல்காரர்கள் தம்மால் கடத்தப்பட்ட பொதிகளைக் கடலில் வீசியுள்ளனதுடன் இவை, நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட...

வறட்சி தொடர்பில் விசேட கவனம் தேவை: இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று காற்றுடன் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய...

இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம்: ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...

இலங்கை அணியின் ஆட்டத்தை சிரம் தாழ்த்தி பாராட்டிய விராட் கோலி

செம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்பெடுத்தாட்டத்தால் இந்திய அணி தோல்வி தழுவியதையடுத்து இந்தத் தொடர் திறந்த தொடராகியுள்ளது. குழு பி-ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுமாறு தொடர் மாறியுள்ளது. இது அன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதாலும் நேற்று இலங்கை அணிஇந்தியாவின் இலக்கை...

சிவகார்த்திகேயனுக்கு இளம் சூப்பர் ஸ்டார் பட்டம்!

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா...

‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995...

அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்....

அரச, தனியார் பஸ் ஊழியர்களிடையே மோதல், 2 பேர் வைத்தியசாலையில்

வவுனியா தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை அரச போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று(08) நண்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் இதேபோன்று மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல காணப்படுவதாகவும்...

திருமுருகன் காந்தியை விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை...

இந்தியாவுடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி

சம்பியன் ட்ராபி தொடரின் நேற்றய போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதனையடுத்து, இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களான ஷிகீர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் துடுப்புடன் களமிறங்கினர். அசத்தலாக ஆடிய...

காங்கேசன்துறை மோசடி: கோட்டாபயவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு...

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைக்க விசேட திட்டம்

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையே...
Loading posts...

All posts loaded

No more posts