காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த மோசடி தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது சாட்சியமளித்த தயா ரத்நாயக்க, தமது உத்தரவினை மீறி இயந்திர சாதனங்கள் வெட்டப்பட்டு பழைய இரும்பிற்கு விற்பனை செய்யப்பட்டதாக வாக்மூலம் வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.