Ad Widget

முரளிதரனுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முரளிதரனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் HALL OF FAME விருதினைப் பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்பதனை முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

முத்தையா முரளிதாரன் 800 விக்கட்டுக்களை கைப்பற்றிய உலகின் முதலாவது பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 534 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளதுடன் T20 கிரிக்கட் போட்டிகளில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related Posts