தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? : யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர்...

டெங்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

டெங்கு நோய் காரணமாக பதுளை பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று...
Ad Widget

வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்த வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை நேற்று அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இதன்போது வவுனியாவில் 399 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் தமது போராட்டம் 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லையென்றும் முதலமைச்சர், பிரதமர் ஆகியோர்...

மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யப்பட்டது

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்யும் பணிகள், நேற்று (03) இடம்பெற்றன. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சா.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா,...

மீனவர்களை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியினர் : கூட்டத்தில் மீனவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற இழுவைப் படகுமூலமான மீன்பிடியைத் தடைசெய்யும் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, மீனவ பிரதி நிதிகளுடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவைப்படகு மூலம் தொழில் செய்யும் உள்ளூர் மீனவர்களுக்குப் பிரச்சனையில்லையெனவும், இந்திய இழுவைப்படகுகளுக்கே சட்டமூலம்...

தமிழரசுக்கட்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சி : எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதில்!!!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. “சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவுள்ளனர்....

புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லை :யாழ். கட்டளைத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லையென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த வலி.வடக்குப் பகுதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி இறக்குதுறை மற்றும் 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு...

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள்: யாழ்.அரச அதிபர்

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...

காணாமல் போனவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு! : உச்ச நீதிமன்றம்

மட்டக்களப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உச்ச நீதமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அரசாங்கம் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு...

கடமைகளைப் பொறுப்பேற்றார் அனந்தி

வட மாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் திருமதி அனந்தி சசிதரன, தனது கடமைகளை, இன்று (03) பொறுப்பேற்றார். யாழ். ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்,தன்னுடை கடமைகளை, இன்று (03) மதியம், உத்தியோகபூர்வமாக அனந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், வட மாகாண...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அச் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு: நான்காவது நாள் சாட்சியப்பதிவின்போது

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்...

இரு தசாப்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்

யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டி ஜே151ஆவது கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான உறுதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கையளித்துள்ளார்....

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டோனி புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தமை குறிப்பிடத்தக்கது. டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை...

இலங்கை அணி வீரர் ஹசரங்க தனது கன்னிப் போட்டியில் உலக சாதனை

தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேற்றயதினம்(02) கலந்துகொண்ட வனிந்து ஹசரங்க உலக சாதனை படைத்துள்ளார். சிம்பாபே அணிக்கு எதிராக இன்று காலியில் நடைபெற்ற போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை தொடராக பெற்று ஹெட்ரிக் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். தனது கன்னிப் போட்டியில் இவ்வாறு சாதனை நிலைநாட்டிய உலகில் மூன்றாவது வீரராக ஹசரங்க பதிவாகியுள்ளார். காலி ரிட்ச்மன்...

முன்னாள் போராளிகளான 36 பட்டதாரிகளுக்கு வேலை

தமிழீழ​ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில், பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டு, இயக்கத்தில் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் ​பட்டதாரிகளாக நியமனம் செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனா்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் டி.எம். சுவாமிநாதனே, மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னாள் போராளிகளான பட்டதாரிகளின் விவரத்தை திரட்டிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,...

சிம்பாபே அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை

சிம்பாபேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியை வசப்படுத்திய இலங்கை அணி, சிம்பாபேவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதற்கமைய, களமிறங்கிய அந்த அணி 33.4 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து, 155 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது....

சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர்! : சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக,...

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மாவை சேனாதிராஜா

வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அனந்தி சசிதரன், சிவகரன்...

நான் சிவராம் படுகொலை வழக்கில் சம்பந்தப்படவில்லை: சிவநேசன்

பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் யாழ் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும்...
Loading posts...

All posts loaded

No more posts