பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கைது!

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் காவல்துறை அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த...

ஆவா குழுவினர் இருவர் கைது

பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, நேற்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய்...
Ad Widget

சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: சுமந்திரன்

”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள்...

மல்லாகத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டார்!

யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பின்னர், கடத்தப்பட்ட வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி, பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில்...

மாற்றுத் தலைமைக்கு இடமில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என்றும் ஒற்றுமையே பலம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங்கிற்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அண்மையில் யாழில்...

க.பொ.உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம டபிள்யூ எம் என் ஏ .புஸ்பகுமார இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது...

தடகளத் தொடரில் யாழ். வலயம் சம்பியனானது

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 10ஆவது தடகளத் தொடரில், யாழ். கல்வி வலயம் சம்பியனானது. யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தடகளத் தொடர், நேற்று (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் மொத்தமாக 650 புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. வெற்றிக்கிண்ணத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிவைத்தார்....

பருத்தித்துறை இளைஞனின் இறுதிக்கிரியை: பாதுகாப்பு தீவிரம்

யாழ்.பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக்கிரியை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அப் பகுதியில் ஏராளமாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞனின் சொந்த இடமான துன்னாலையிலும், நெல்லியடி முதல் கொடிகாமல் அரசடி வீதிவரையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் குவிந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும்...

பொதுச்சேவைகள் அனைத்தும் ஒரு நாள் ஸ்தம்பிக்கும் ; தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டாக எச்சரிக்கை

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சகல அரச சேவைகளினதும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாநாடொன்றை நடத்தவுள்ளது. இதன் பலனாக நாட்டின் அரச சேவைகள் அனைத்தும் ஒரு நாள் ஸ்தம்பிக்கும் வகையிலான வேலை நிறுத்தப்போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் நலிந்த ஹேரத் தெரிவித்தார். இந்த போராட்டத்தின் ஒரு...

சிம்பாப்வே அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற சிம்பாபே அணிக்கு எதிரான 5 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 203...

கோட்டாவை கைது செய்ய வேண்டும்: சரத் பொன்சேகா

பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழல் மோசடி, நிதி மோசடி மற்றும்...

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தர்க்கம்: முதலமைச்சர் சி.வி. வெளிநடப்பு!

காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட்...

பருத்தித்துறை இளைஞன் கொலை: பொலிஸாருக்கு விளக்கமறியல்

யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான்...

பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையானது: நடிகை கஸ்தூரி

தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு...

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் -பொ.ஐங்கரநேசன்

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும்...

முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பெற்றோலிய தொழில்சங்கம் பணிப்புறக்கணிப்பு

கனிய வள அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் நடைப்பெறாவிட்டால் முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தற்காலிமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க தரப்பில் இருந்து எந்த விதமான உறுதி...

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது

வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார். http://www.e-jaffna.com/archives/84168

தமிழரசுக் கட்சியை புனரமைக்க மாவைக்கு உரிமை இல்லை

“தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்...

தனி நாட்டு கோரிக்கைக்கு தூபமிடுகிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி : திஸ்ஸ விதாரண

“வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளது

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை தயாரித்தல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்கர்களினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று நாட்டுக்கு அவசியம் இல்லை என்ற கருத்து தொடர்பில் தாம் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூட்டமைப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts