- Monday
- May 18th, 2026
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோத தொழில்கள் அனைத்திற்கும் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையகத்தின் பொருளாளரும், முல்லைத் தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவருமான எ.மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் பாரிய தொழில் பயிற்சி...
இன்னும் மூன்று வருடத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைத்துவிடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களாக இருந்து சமூதாயத்திற்கு கடமை செய்ய வேண்டும்....
தென்னிலங்கை கட்சிகள் இன்று வடக்கு – கிழக்கில் காலூன்றி தமது கட்சியின் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், தமிழ் தலைமைகள் வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....
காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம், எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை பயணம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி...
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக...
வடக்கு மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கை குறைவடைந்து செல்கின்றமையே, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு காரணமென ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு அதிகளவான மீன் லொறிகள் வந்ததாகவும் தற்போது இந்நிலை மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெற்கில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அளவுகூட வடக்கில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லையென...
மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்...
வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளிக்க நான் விரும்பவில்லை. அதிலிருந்து ஒதுங்கவே விரும்பினேன் என வட மாகாண சபை அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். சமகால அரசியல் கருத்தரங்கும், கேள்வி பதில் நிகழ்வும் என்னும் தொனிப் பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியைச்...
டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க...
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற தீர்மாணமிக்க இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களின் ஆடைகள் கழற்றிய சம்பவம் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர்களின் ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே சம்பளத்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட்...
சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மெத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மெத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. குறித்த நியமனம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கோப்பைத் தொடர் வரை நீடிக்கும் என சபை (BCCI) தெரிவித்துள்ளது. அந்த வகையில் அவரது முதலாவது பணியாக, ஜூலை 26 இல் இலங்கையில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் துன்னாலையைச் சேர்ந்த இளைஞன், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகிய சம்பவத்தில், பொலிஸாரினால் அதிரகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை...
யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்,...
காணாமல் போனோருக்கான அலுவலத்தின் மூலம் பொறுப்புக் கூறவேண்டியவா்களை அல்லது குற்றவாளிகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வித பரிகாரங்களும் வழங்கபடவில்லை எனவும் சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளாா். தனியார் தொலைக் காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளாா். குறித்த நோ்காணலில் அவா் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காணமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவா், யாரினால்...
மக்கள் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹியத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என்பதை...
கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் காவல்துறை அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts
