- Sunday
- May 17th, 2026
நடைமுறையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் அடையாள அட்டைகள் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார். குறித்த அடையாள அட்டையானது பாதுகாப்பு உத்திகள் பலவற்றை கொண்டுள்ளது என...
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களைப் பொலிஸார் கைது செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களைக் கைது செய்து ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்துவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். துன்னாலைப் பகுதியில் தொடர் சுற்றி...
கிளிநொச்சி பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை இன்று (09.08.2017) காலை 9மணியளவில் வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவரது பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும்...
துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது....
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஆவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள்...
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும்...
சொந்த இடத்தில் வாழவைக்குமாறு கோரி தலைநகர் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், தாம் ஏமாற்றப்பட்ட நிலையை உணர்ந்ததாக இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்படையின் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, கடற்றொழிலை மேற்கொள்ள வழிசமைத்து கொடுக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றையும் கையளித்தனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம்...
புதிய வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும் நாளை (10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதிருந்தாலோ அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளதாக...
புரிந்துணர்வுகள் எமக்குள் தேவை. அதனை நீங்கள் செயலில் காட்டி உள்ளீர்கள்’ என ஆனந்த வீரசேகர என்ற தேரர் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். அம்பாறையைச் சேர்ந்த தேரரான ஆனந்த வீரசேகர, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை, யாழ்....
நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதிநேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும்...
வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014...
சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கை கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் தாங்கள் பெறும் சமுர்த்தி உதவிகள், மற்றும் தங்கள் பெயர்கள் வெட்டப்படுகின்றன என முறைப்பாடுகள் செய்கின்றனர். குறிப்பாக...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நேற்று...
செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம்...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர். நேற்றயதினம் அதிகாலை நெடுந்தீவு, காரைநகர் மற்றும் காங்கேசன்துறை ஆகிய கடற்பகுதிகளில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் சமிந்த வலாகுளுக்கே தெரிவித்தார். குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 12 றோலர்...
ஆவாகுழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆவாகுழுவின் தலைவர்...
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழு தலைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் 48 மணித்தியாலங்கள் காவலில் வைத்து, யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று...
Loading posts...
All posts loaded
No more posts
