Ad Widget

மனித உரிமை ஆணைக்குழுவில் துன்னாலை மக்கள் முறைப்பாடு

துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதேவேளை, கடலோரப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு முகாம் திரும்பிய கடற்படையினர் மீது, வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தோர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதன்பின்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விட்டு வீடு திரும்பிய பொலிஸ் உப பொறுப்பதிகாரி, தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கப்பூது வெளிப்பகுதியில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் இருந்து, பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேற்படி சம்பவங்களைத் தொடர்ந்து, விசேட பொலிஸார் களமிறக்கப்பட்டனர்.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாருக்கும் இணைந்து, முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே, அப்பகுதி மக்கள், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து, குறித்த கைதுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

Related Posts