- Sunday
- May 17th, 2026
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி துப்பாக்கிப்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத...
கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட, 2,230 பரீட்சை மத்திய நிலையங்களில், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள், இன்று (08) ஆரம்பமாகின்றன என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த பரீட்சைகளில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர், இம்முறை தோற்றவுள்ளனர். அதில், 220 பேர் விசேட தேவையுடைவர்களுக்கான விண்ணப்பத்தாரிகளாவர் என்று, பரீட்சைகள் திணைக்கள...
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு...
வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல்...
கொக்குவில் பகுதியில், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொக்குவிலைச் சேர்ந்த விக்டர் நிசாந் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முக்கிய சந்தேக நபர்கள் கைது...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உள்ள கிணற்றில் இருந்து மேலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் கிணறுகள், மலசல கூட குழிகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டு வந்தன. இதேவேளை அண்மையில் ஆனையிறவு பகுதியில் இவ்வாறு பெருமளவிலான மோட்டார் குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாண சபையின் அமைச்சரவை நெருக்கடியால் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையேயான நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு...
ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நிஷா விக்டெர் என்பவர் ஆவா குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்....
யாழ். குடாநாட்டில் தொடரும் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது குறித்து நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய...
கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று வடக்கு மாகாணசபை தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் குழப்பங்கள் அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர வேறு எதுவும்...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (05) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக இருக்கும் எனவும், கடல் அலையின் வேகம் அதிகமாக காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களில் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இன்று காலை முதல் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து...
கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு இளைஞன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் அம்பால் வீதியை சேர்ந்த 24 வயதான புஸ்பராஜா தக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள் வெட்டை மேற்கொண்ட இளைஞர்கள் தக்ஸனின் மோட்டார் சைக்கிளை...
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 183 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக நிர்ணயித்த 622 ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் 439 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி உள்ளது. தற்போது இலங்கை அணி போலே ஓன் முறையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில்...
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தேர்வு எழுதவிருக்கும் முஸ்லிம் மாணவிகளைத் தங்கள் கலாசார ரீதியான சீருடையுடன் தேர்வு எழுதுவது தொடர்பாக, எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோருகின்றன. இது தொடர்பாக அகில...
யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் யாழ்.பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை...
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து உரையாற்றிய அவர், ‘1977 இல்...
Loading posts...
All posts loaded
No more posts
