வடக்கில் மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்களை அமைக்காதிருக்க நடவடிக்கை

வட மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகள் உருவாக்கப்பட கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி அமைச்சு எடுக்க வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வடமாகாண சபையின் 101வது அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, நீர்வேலி பகுதியில் மயனாம் ஒன்றை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள், மாகாண...

வடக்கில் மீண்டும் காலூன்றியது இலங்கை சுங்கம்

ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பல இடங்களில் அதன் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் காங்கேசன்துறையில் அதன் முதலாவது உப அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக...
Ad Widget

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தெற்கிற்கு தப்பியோடும் ‘ஆவா’ தலைவர்கள்!

வடக்கில் நடத்தப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர், ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் தெற்கு பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பன பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் வடக்கில் பொலிஸார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில், அங்கிருந்து...

மாணவி வித்தியா படுகொலை வழக்கு : விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பொறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர்...

வேலை கோரும் பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் முகமாக அரச வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் 35 வயதிற்கு உட்பட பட்டதாரிகளே நியமனத்தில் உள்வாங்க படுவார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்து 35 வயதிற்கு மேற்பட்ட வேலை...

“மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்” ; மார்தட்டும் தமிழன்

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர்...

வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ”நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்”

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின்...

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது

சுன்­னாகம் பகு­தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கட­மையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­திய குழு­வி­னரில் இருந்­த­தாக கூறப்­படும் மூன்று ஆவா குழு சந்­தேக நபர்­களை சுன்­னாகம் பொலிஸார் நேற்று கைது செய்­தனர். கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் இரு­வரை வெட்டி காய­ப்படுத்­தி­யமை தொடர்பில்...

தமிழ் மொழியில் எமது பிள்ளைகள் கல்வி கற்பது எமக்கு மகிழ்ச்சி!! : மன்னார் சிங்கள கம்மான மக்கள்

‘எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` என மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேச சிங்கள கம்மான மக்கள்அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் ரிஷாட்...

ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தெல்லிப்பளையில் கைது!!

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆவா குழுவின் தலைவர் எனக் கருதப்பட்டவர்...

க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு : 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்!!!

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க அரசு தீர்மானம்!

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும்...

முதல்வர் கூறினாலும் இராஜினாமா செய்ய மாட்டேன்: டெனீஸ்வரன்

முதலமைச்சர் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ”2013ஆம்...

சுமந்திரன் விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரனின் கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, சட்ட விரோதமாக...

அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை நேற்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும்...

யாழ். வாள்வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் நேற்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்ததோடு அன்றைய தினம் அடையாள...

கடற்படை எமது நிலத்தை விட்டு வெளியேறவேண்டும்: இரணைதீவு மக்கள்

தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை வழங்காமல் ஏமாற்றி வருகின்றன : சிறிதரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை செலுத்த வில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமருடனான நேரடி கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார். தொடந்து உரையாற்றிய அவர் ‘வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 2008,2009 இறுதி யுத்தத்தின்போது கைத்தொழில்கள், கடைகள் உட்பட...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது!!! : கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக்...
Loading posts...

All posts loaded

No more posts