Ad Widget

வடக்கில் மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்களை அமைக்காதிருக்க நடவடிக்கை

வட மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகள் உருவாக்கப்பட கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி அமைச்சு எடுக்க வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



வடமாகாண சபையின் 101வது அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, நீர்வேலி பகுதியில் மயனாம் ஒன்றை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள், மாகாண பொதுமக்கள் முறைப்பாட்டு குழுவுக்கு அனுப்பியிருக்கும் முறைப்பாடு தொடர்பாக அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.



இது தொடர்பாக மேலும் அவர் கூறு கையில்,

நீர்வேலி மயான பிரச்சினையில் நாம் தலையிட விரும்பவில்லை. ஆனால் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் இனிவரும் காலங்களில் குடியிருப்புக்களை உருவாக்குவதை வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



இந்நிலையில் இனிவரும் காலங்களில் மட்டும் இந்த நடைமுறையை பின்பற்றாமல் இப்போதும் மயானங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்தார்.



தொடர்ந்து மயானங்களுக்கு அருகில் குடியிருப்போர் எந்த காலத்திலும் மயானங்களை அகற்றுமாறு கோர கூடாது என்ற உடன்பாட்டை பெறவேண்டும் என்றார்.

இந்நிலையில் மயானங்களை சூழவுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் அவற்றின் சுற்று சூழல் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின் தீர்மானம் எடுக்கலாம் என்றார்.

Related Posts