ஜனாதிபதியின் செயற்பாடு வெறும் கண்துடைப்பா? : சிவாஜிலிங்கம் கேள்வி

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலைசெய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்கியமை வெறும் கண்துடைப்பா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் 200 தமிழ் அரசியல் கைதிகள்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் குடும்பத்திற்கு வீடு!!

யாழ்.கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உயிரிழந்த மாணவன் சுலக்சனின் சொந்த இடமான சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. நேற்று யாழ் வருகைதந்த அமைச்சர் சுவாமிநாதன் வீட்டுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளார்....
Ad Widget

வவுனியாவில் கொடூரம்: சிறுவன் மீது சித்திரவதை!

வவுனியா - குருமன்காடு பகுதியில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் தாயுடன் வசித்த நான்கு வயதுச் சிறுவன், அப்பெண்ணின் இரண்டாவது கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவனைப் பார்க்க அவனது தந்தை, (தனது மனைவியின் முன்னாள் கணவன்) ஞாபகம் வருவதாகக் கூறியே அவன் சிறுவனைத் தாக்கியுள்ளான். தற்போது...

கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்றிட்டம் : விண்ணப்பம் கோரல்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கலைஞர்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, உடுவில் பிரதேச செயலாளர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச கலாசார அதிகார சபையில் அங்கத்துவமுடைய கலைஞர்கள் 55 வயது முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள்...

கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. கேப்பாப்புலவு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

பெயர்ப் பலகைகள் சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது : மனோ

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதுவார்களேயானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச...

21 வது கடற்படைத் தளபதி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்

இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார். இன்று (22) காலை கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதி தமது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்தவினால் வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யாவுக்கு சம்பிரதாயபூர்வமாக கடற்படைத் துறையின்...

வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியாவில் குருமன்காடு – காளி கோவில் வீதியில் வாள்களுடன் வந்த குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம், நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்திலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமத நிலையினைப் பாதிக்கப்பட்ட தரப்பினரோ அல்லது சர்வதேசமோ...

வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த வாக்குமூலத்தினை அடுத்த வழக்குத் தவணைக்குள் நீதமன்றிற்கு வழங்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

புகையிரத விபத்துகளைத் தடுக்க உடன் நடவடிக்கை அவசியம் : சி.தவராசா

புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (24.08.2017) வட மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல பாதுகாப்பற்றவையாகக் காணப்படுவதனால் தொடர்ச்சியான விபத்துகள்...

காலத்தை வீணடிக்காது வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்: இரா.சம்பந்தன்

காலத்தை வீணடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு...

நிவாரணம் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிப்பு!

கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சிக்கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்...

குணசீலன் மற்றும் சிவனேசன் ஆகியோருக்கு அமைச்சு பதவி!

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும்...

யாழ். பல்கலை மாணவன் மர்மக் காய்ச்சலால் மரணம்

இரண்டு நாட்களாக தொடர்ந்த மர்ம காய்ச்சலின் காரணமாக யாழ்.பல்கலைக் கழக மாணவன் ஒருவர் நேற்றுமுன் தினம் திடீரென உயிரிழந்துள்ளார். வவுனியா, மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த வரும், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவனுமான விஜயரட்ணம் லிந்துயன் (வயது 23) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த மாணவன் கோண்டாவில் பகுதியில் உள்ள...

புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்!

ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். தேசிய சுதந்­திர...

பரீட்சைக்கு முன்பு வினாத்தாளை வௌியிடவில்லை : கல்வியமைச்சு

குற்றம் சுமத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் இரசாயனவியல் வினாத்தாள் துண்டுப்பிரசுரத்தை பரீட்சைக்கு முன்பதாக வௌியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மருதங்கேணியில் போராடும் மக்களுக்குச் சமூக நீதிக்கான அமைப்பு ஆதரவு

மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் காணாமலாக்கப்பட்ட உறவினருக்குப் பதில்கூறக்கோரி 150 நாட்களைக் கடந்து தொர்ச்சியாக இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அண்மையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர். அங்கு கருத்துத் தெரிவித்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர்களில் ஒருவரான ச.தனுஜன் ´´மக்கள் தமது உறவுகளைப்...

கட்சியில் எனக்கான அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள்: டெனிஸ்வரன்

கட்சியில் எனக்கான அடிப்படை உரிமையினை தெளிவு படுத்துங்கள் என வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். தனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தனது செயலாளர்...

சிறுவனைப் பயன்படுத்தி துணிகரக் கொள்ளை: மூவர் கைது!

வவுனியாவில் 10 வயதுச் சிறுவனைப் பயன்படுத்தி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான 18...
Loading posts...

All posts loaded

No more posts