பலாலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவரை காணவில்லை?

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்காவது படைபிரிவில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் தமக்குரிய ஆயுதத்துடன் இன்று காலை பாதுகாப்பு அரண் ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மஹாநாயக்க தேரருடன் முதலமைச்சர் சீ.வி கலந்துரையாடல்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனும், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரும் முக்கிய விடயங்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹாநாயக்க தேரருக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு தெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் முதலமைச்சர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

25000 தண்டப்பணம் சிலநாட்களில் அமுல்! தலைக்கவசங்களுக்கு SLS தரச்சான்றிதழ் அவசியம்!!

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். குறித்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிள்களின் தலைக்கவசங்களுக்கு...

நல்லூர் கந்தனால் மாநாகர சபைக்கு ஒரு கோடியே 37 லட்சம் இலாபம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லுர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த வருமானம் ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். ஆணையாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நல்லூர் பெருந் திருவிழாக் காலத்தில் கடைகள், விளம்பரப்...

சடலத்தினை அடையாளம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள்

சென்ற மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வாறு விபத்து சேவை பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர். மேற்படி புகைப்படத்தில்...

6ஆம் வகுப்பிற்கு மேல் சகல மாணவர்களுக்கும் மடிக்கணனி

6 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் மடிக் கணனி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.காலி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மீண்டும் வாள் வெட்டுச்சம்பவம்: அறுவா் காயம்!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....

கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெற்றுக் கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து...

வித்தியா படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார்!!!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம்...

பதவிகளை பங்குபோடுவதிலேயே எமது காலத்தினை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்: தவராசா

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடுத்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன்களை எட்ட முடியுமென வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...

வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி: இராதாகிருஷ்ணன்

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, தெற்கு உறவு ஒரு காலத்தில் சவால் மிக்கதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின்...

மஹிந்தவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்தனர்: கமால் குணரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்ததாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், ‘ ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “தமிழ்,...

தமிழர்களின் சிந்தனையில் ஆயுத கலாசாரம்! :பொலிஸ்மா அதிபர்

கடந்தகால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக்கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியமென மேலும் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

நாட்டில் இன்றும் காற்றுடன் கூடிய மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் சிறிய காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய மலைநாடு மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல் மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடான ஹம்மாந்தோட்டை...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலைய்யா சுதாகரன் என்பரரே உயிரிழந்துள்ளார்....

காணாமல் போனவர்கள் விடயத்தில் ஜனாதிபதியின் நிலை என்ன? ஜரோப்பிய பிரதிநிதிகள்

நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தம்மால் அதனை உறுதியாக கூற முடியாது எனவும், அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்...

அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் சலுகை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்...

ராணுவத்தால் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன : முதலமைச்சர்

”வடக்கு கிழக்கில் ராணுவத்தால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாணவி கிருஷாந்தி படுகொலையின் 21ஆவது வருட நினைவுதினம், அவர் கொலையுண்ட செம்மணி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந் நினைவு தின நிகழ்விற்கு அவர் அனுப்பிவைத்திருந்த செய்தியிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!!

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில்  இன்று,  8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா, ஹொன்ரோஸ், எக்குவடோர் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான பொனின் தீவிற்கு அருகில்...

18 வய­துக்­கு மேற்­பட்­டோ­ருக்கு வரிக்­கோவை இலக்கம்! இலாபம் பெறும் புண்­ணி­யஸ்­த­லங்கள் மீது வரி!!

இலங்­கையில் 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு உல­க­ளா­விய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். எனினும் இவர்கள் மீது வரி சுமத்­தப்­ப­டாது. இந்த இலக்­கத்தை கொண்டு சிகி­ரியா மற்றும் நூத­ன­சா­லை­க­ளுக்கு இல­வ­ச­மாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்­கு­களை இல­கு­வாக திறக்க முடியும் என நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts