வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது - 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம்...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்தே, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட்...
Ad Widget

விரிவு படுத்தப்படவுள்ளது இலவச Wi-Fi வழங்கும் திட்டம்!!

இலங்கை பூராகவும் இலவச Wi-Fi (இணைய வசதி) வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இது விரிவுபடுத்தப்படவுள்ளது. இலவச Wi-Fi வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. பொருளாதார...

போக்குவரத்துக் குற்றங்களுக்கு வழங்கும் சீட்டுகளை பொதுமக்களுக்கு விளங்கும் மொழியில் வழங்க நடவடிக்கை!

போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...

முன்னாள் போராளிக்கு உதவிய வடக்கு ஆளுநர்!

முன்னாள் போராளி ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியளித்துள்ளார். ஆளுநர் ரெஜினோல் குரே வாரம் தோறும் முன்னெடுத்துவரும் மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (புதன்கிழமை) யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஆளுநர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த முன்னாள் போராளி...

பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

யுத்த குற்றம் மற்றும் அதற்கு பின்னராக விடயம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதாகவும்,...

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 100 வாக்குகளால் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 41 வாக்குகள் பதிவாகியுள்ளது. வரிமுறையினை இலகுப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதே இந்த புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் பிரதானம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை : சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு எப்போது நிறைவேற்றப்படுமென குறிப்பிட முடியாத நிலை உள்ளபோதும், சர்வஜன வாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்கள்...

செய்வினை அகற்ற பூசாரியின் மருந்தை அருந்தியவர் மரணம்!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்திவ் கடன்சுமை என ஆலயப் பூசகரிடம் சென்றவரை செய்வினை அகற்றுவதாக கூறி பூசகர் கொடுத்த மருந்தை அருந்தியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் குறித்த சம்பவத்தில் ஜெயந்திநகரச் சேர்ந்த ஆதித்தகுமார் வயது-50 என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறி்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கடன் சுமை என ஆலயப்...

தமிழரசுக்கட்சியின் தன்னிச்சை செயற்பாடு பற்றி போட்டுடைத்தார் சித்தார்த்தன்!

அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொருபுறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர்.இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எமக்கு எவருக்குமே தெரியாதென போட்டுடைத்துள்ளார் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன். இதேவேளை மறுபுறம் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக...

யாழ். பல்கலைக்கழக பெண் ஊழியர் மீது இரு அதிகாரிகள் தகாத செயல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தபோதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும்...

பளையில் இராட்சத வெடிகுண்டு! ஐந்து கிராம மக்கள் இடப்பெயர்வு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் 500 கிலோகிராம் கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நேற்று (7) பளைப் பொலிசாரால் இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை...

எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் எனத் தெரிந்திருக்கும் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்பொன்று பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஜெனரல்...

200 நாட்களாகியும் தீர்வில்லை: உறவினர்கள் கண்ணீர்

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக...

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள் :நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

இலங்கையில் முத்திரைத் தீர்வைக் கட்டளைச் சட்டம், முதல் முதலில் 1909ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றம் 1982ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலம் சாதனங்களுக்கும் (Instruments), ஆவணங்களுக்கும் (Documents) அவற்றின் தொடர்பாகவும் தீர்வைகள் அறவிடப்பட்டன. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் அசையும், அசையாச் சொத்துக்கள் மீதான முத்திரைத் தீர்வை மாகாண...

களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் : நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த சிங்கள மொழி பேசுகின்ற நிபுணத்துவ வைத்தியர்களும், தாதியர்களும், ஏனைய ஊழியர்களும், என் மீது கரிசனை காட்டி...

சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்

இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம்...

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் இத் தீர்மானம், அவைத்தலைவர் ஊடாக ஆளுநருக்கு...

கிருசாந்தியின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரயில் பயணத்தில் வெளிப்பட்ட தமிழ் பெண்ணின் அன்பு!! : சிங்கள மக்கள் நெகிழ்வு

ரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.உடரட்ட மெனிக்கே ரயிலில் தமிழ் பெண் ஒருவர் செயற்பட்ட முறையினை தென்னிலங்கை சிங்கள சமூத்தவர்கள் பாராட்டியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஒருவர் உடரட்ட மெனிக்கே ரயிலில் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த ரயிலில் அந்த தமிழ் பெண்...
Loading posts...

All posts loaded

No more posts