- Saturday
- May 16th, 2026
யாழ். சர்வதேச திரைப்பட விழா, தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில், குறித்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய...
பலாலிபடைத்தலைமயகத்தில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் காணாமல் போயிருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி வீமான்காமம் பகுதியில் இருந்து நேற்று (11) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தகவல்கள் தெரிவித்திருந்தனர். பலாலிபாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த 9ம் திகதி இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் காணாமல் போனவிடயம் கடமைக்கு வேறு ஒரு சிப்பாய்...
இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இடைக்கால அறிக்கை இம்மாதம் 21ம் திகதி வெளியாகும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் 20வது திருத்தச்சட்ட த்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் கூறியிருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டம் தொடர்பில் மிக இரகசியம் பேணப்பட்டு நடவடிக்கைகள் பேணப்பட்டுவந்தன. எனினும் பிரேரணைக்கு போதியளவு உறுப்பினர்களின் ஆதரவின்மையால் முதலமைச்சர் சார்பு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மூலமே தகவல் வெளிக்கசிந்ததாக தெரியவருகின்றது. மாகாண...
முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பரிந்துரைக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வருகிறது....
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாளை 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர்...
மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி...
பாடசாலை செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்க்க விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர், அந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள்...
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள், மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். வைத்தியசாலை...
யுத்த பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதாவது 19 வைத்திய நிபுணர்கள் தேவையான நிலையில்...
வவுனியா தேக்கவத்தை பகுதி வீதியில் ராணுவச்சீருடை மீட்கப்பட்டதையடுத்து, அப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சீருடையில் விசேட அதிரடிப்படையினரின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா பொலிஸார், அவற்றை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இராணுவச்சீருடை மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன...
கனகலிங்கம் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினர் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை.... தமிழ்த் தேசப் பற்றாளன் பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த 03-09-2017 அன்று இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தோம். புங்குடுதீவு 7ஆம் வட்டாரம்,மடத்துவெளியைச் சேர்ந்த பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் காலங்கள் தொடக்கம் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி உரிமைப்...
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நாடு...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரி அவர்களது உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வீதியில் தொடர்ந்து நடத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலய வீதியை போராட்டம் நடத்த வழங்க முடியாதுள்ளதாகவும் அதற்கான காரணத்தையும் நிர்வாக சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்றுக் கடிதம் மூலம் அறிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி...
இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் முதற்கட்டமாக...
அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டிடத்தினை விடுவிக்குமாறு கோரி அப் பகுதிமக்கள், மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக நேற்று(10) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டது பிரார்த்தணை வழிபாடுகள் முண்ணெடுகப்பட்டு வந்துள்ளது. குறித்த் மத ஸ்தலத்தினால்...
விசுவமடுவில் நடந்த தீ விபத்துச் சம்பவம் ஒன்றில் 2 அரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் கடையொன்று தீப்பிடித்து எரிந்தது. இரண்டரை வயதுக் குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார்....
இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிசாரின் தகவல்களின் படி 2015ம் ஆண்டு 2389 ஆண்கள் உள்ளிட்ட 3058 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2016ம் ஆண்டு 2339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். இந்த வருடம் முதல் 6 மாத காலங்களில் 1597...
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து விட்டால், மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக்...
Loading posts...
All posts loaded
No more posts
