இளவாளையில் கால்பந்தாட்ட நடுவர் மீது வாள்வெட்டு!

இளவாளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி அராலி – தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 58 ) என்பவரே வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய...

காணாமற்போனோரை மீட்டுத்தர மகிந்தவால் மட்டுமே முடியும்!

வடக்கு – கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்தான் முடியும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும்...
Ad Widget

முதல்வர் விக்கினேஸ்வரனுடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது இல்லத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (14.02.2018) புதன்கிழமை காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் மற்றும் யாழ் மாநகர முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம்...

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் : 17 பேர் பலி! டொனால்ட் ட்ரம்ப் இரங்கல்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி...

கிளிநொச்சியில் குடும்ப பெண் கொலை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ப பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் (வயது 24) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இடம்பெறும்கொண்டாட்ட நிகழ்வொன்றிற்கு அயலவர்கள்...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவினை வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி , வட மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர மற்றைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க எவ்வித கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை...

மேற்குலகுடன் மகிந்த கைகோர்த்தால் மைத்திரியும் றணிலும் தூக்கிவீசப்படுவார்கள்

முதலமைச்சர் அவர்கள் கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார் அதில்... கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம்...

யாழில் ஆட்சிபீடமேறுகிறது தமிழரசுக் கட்சி: மேயராக ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர்...

முகாமைத்துவ உதவியாளர் நியமனம்: வடக்கில் 202 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு

அரச முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 202 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில் பெற்ற பெறுபேற்றின் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் 202 பேரும் தெரிவாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 141 புள்ளிகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 133 புள்ளிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 136 புள்ளிகளும் வவுனியா...

மகிந்த எமக்கு எதிரியில்லை ! அவர் நல்ல தலைவர் !! சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு !!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும் என்று, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும்...

கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?- சுரேஸ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மந்தமான வெற்றியை பதிவுசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?, என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு...

கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்க வேண்டாம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் நீண்ட...

ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயார்- சுமந்திரன்

புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் வெளியிலிருந்து ஆதரவளிக்க...

கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் : சிறிகாந்தா வேண்டுகோள்

வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து...

யாழ்ப்பாணம் வருகின்றார் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா!

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் தொனிப்பொருளில் இந்த பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தில்...

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை : ராஜித

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்...

மஹிந்தவின் வெற்றியால் கூட்டு அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை- சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்கால...

நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யும்...

ஈழம் சிறிதாகிவிட்டது- மஹிந்த

வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இத்தேர்தலின் மூலம்...

தெற்கில் யார் வென்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை : வி.மணிவண்ணன்

தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யார் வந்தாலும் நாங்கள் தமிழ் தேசிய தளத்தில் இருந்து, கொள்கையில் மாற்றம்...
Loading posts...

All posts loaded

No more posts