- Thursday
- May 14th, 2026
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
யாழில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவரை, கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி திருநெல்வேலி – நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குளி பகுதியைச் சேர்ந்த...
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுவேளை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் வந்த மோட்டர் சைக்கிளில் சென்றவரை மறித்துச் சோதனையிட்டபோதே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி...
இரண்டு வருட கால அவசாகத்தை உடன் நிறுத்தி இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு மாற்றுங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு https://youtu.be/LFw80_Fw7yI ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் தமது எதிர்கால செயற்பாடுளை தெளிவுபடுத்தும் முகமாகவும் ஓர் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிக்கை வருமாறு..... நன்றிநவிலல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய...
அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை...
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ். ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால் 109 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்போது யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றினால் 79 மீனவர்களும் யாழ். பருத்தித்துறை நீதிமன்றினால் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் இராமநாதபுரம்,...
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மனித...
ஆங்கிலப் பத்திரிகையொன்றில்நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியிருந்த, “போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ. தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டது. இதனால் அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவினது தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும்...
மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குருநாகலவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி...
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இராணுவ வாகனத்துடன், வான் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றி வந்த வான், ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, வேகமாக வந்த இராணுவ வாகனம்...
தமிழ் கட்சிகள் சுயநலத்திற்காக அன்றி கொள்கை ரீதியிலாக ஒன்றுபட வேண்டும் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழில் செய்தியாளர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடைபெற்றுமுடிந்த தேர்தல் முடிவுகள் தமிழ், சிங்கள தலைவர்கள் தங்கள் குறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் கூறினார்....
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான பாதுகாப்பை கோரியமை தொடர்பான விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகர சபை வேட்பாளராக களமிறங்கிய உறுப்பினர்களில்...
இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி...
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை...
கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின்...
யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவளித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, யாழ்....
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கிளிநொச்சி வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த...
வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் சிலர், கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதும், வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் இந்த நியமனங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே,...
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்களால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவை சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும்...
Loading posts...
All posts loaded
No more posts
