- Tuesday
- May 12th, 2026
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி உள்ளூர் மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துகின்றனர். யாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால்...
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற...
இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் க.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின்...
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினார். “கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர...
தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை...
கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியர் பிரதீபன், நேற்று மாலை தாக்கப்பட்டார். பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர், ஒழுக்கமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலைக்...
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்பட நாட்டின் 13 மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வளி மண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் – மேற்கு பருவமழை காலநிலை மாற்றத்தால் வடக்கிலிருந்து தெற்கு வரையான பகுதிகளில் காற்று வேகம் அதிகரித்துள்ளது என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,...
தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது. அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது....
வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று (புதன்கிழமை) வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...
யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியைக் கொண்டு மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றுபவரிடமிருந்தே நேற்று (புதன்கிழமை) நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டன. நேற்று அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 4 பேரே...
தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. மகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்ற தேனீக்கள், விவசாய இரசாயனங்களினாலும் நகரமயமாக்கலினாலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனைக்...
“மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6“ நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வில் தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய பாடமாக சுகாதாரம் உள்ளது. 2023ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாராண தரப் பரீட்சையில் சுகாதாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வீ மறுசீரமைப்புக் குழு...
வட கிழக்கு தமது தாயகப் பிரதேசமாக நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டுவதற்கும் இதனடிப்படையில் மக்களுக்கு இருக்கக்கூடிய இறைமையையும் வலியுறுத்தி நீண்ட ஓர் விடுதலைப்போரில் தமது தேசியவிடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருந்தனர். தமிழினம் இந்த விடுதலை வேள்வியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துடமைகளையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்திருந்தது. உலகளாவிய மாற்றங்கள்,...
தமிழ் மக்கள் பேரவையால் இளையோர் மாநாடு நடத்தப்படுவதற்கான காரணங்களை அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். இதுதொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கினார். அவர் தெரிவித்ததாவது: உங்கள் யாவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட...
வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் கௌவரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று உருவாக்கப்படும்வரை போராட்டங்கள் தொடர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தியாகி பொன்.சிவகுமாரனின் 44 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். உரும்பிராய் பிரதேசத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...
கரவெட்டி, கரணவாய் கிழக்கில் கேபிள் ரீவி இணைப்பு வயரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதிக்கு கேபிள் ரீவி இணைப்பை வழங்கும் முகவர் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். “கேபிள் ரீவி இணைப்பு வயரைத் தொடுத்திருந்த இரும்புக் கம்பியின் ஊடாகவே மின்சார சபையின் உயர் அழுத்த...
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டையை அண்மித்த பண்ணை கடற்கரை பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. வடமாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
