Ad Widget

யாழ், முல்லை உள்பட 13 மாவட்டங்களில் பலமான காற்று வீசும்!

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்பட நாட்டின் 13 மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வளி மண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென் – மேற்கு பருவமழை காலநிலை மாற்றத்தால் வடக்கிலிருந்து தெற்கு வரையான பகுதிகளில் காற்று வேகம் அதிகரித்துள்ளது என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கண்டி, நுவரேலியா, மாத்தளை, பதுளை, மொனராகலை, புத்தளம், குருணாகல், இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts