வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சில பிரதேசங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும்...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் 2018

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 15-09-2018 காலை 9.30 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நிலைவாலயத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இந் நிகழ்வுகள் 25ம் திகதி வரை நடைபெறும் என்றும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை
Ad Widget

மன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டனவா?

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் பபடுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும்...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு கிளிநொச்சியில் வழங்கிவைப்பு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டுக்கான காசோலைகளே நேற்று ஒரு தொகுதியினருக்கு வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு மீள்குடியேற்ற...

முல்லைத்தீவில் போசாக்கு குறைபாடுகளுடன் அதிக சிறுவர்கள்: கவனஞ்செலுத்துமாறு கோரிக்கை

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படுகின்ற துணுக்காய் பிரதேசத்தின் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியிலேயே கூடுதலான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவாக கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும்...

யுத்தத்தை நிறுத்துமாறு மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்தின – மஹிந்த ஒப்புதல்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற பிரித்தானியா உட்பட மேற்கத்தேய நாடுகள் தீவிர முயற்சியை எடுத்த போதிலும் தான் அதற்கு இடம்கொடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்றது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமே தவிர அது இன ரீதியாகவோ அல்லது தமிழர்களுக்கு எதிராகவோ நடத்தப்படவில்லை என்பதை சகலரும் புரிந்து கொள்ள...

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த இராணுவச் சிப்பாய் நையப்புடைப்பு!

பூநகரி, கரியாலை நாகபடுவான் கணேஸ்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவுசெய்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதோடு குறித்த சிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இராணுவச் சிப்பாய் ஒருவர் புகுந்துள்ளார். இதனை...

தமிழர் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – இரா.சம்பந்தன்

மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு...

யாழ் நீர்வேலியில் திருட்டுக் கும்பல் கைவரிசை

யாழ் நீர்வேலி தெற்கில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு ஒன்றிற்குள் புகுந்த 4 பேர் அடங்கிய திருட்டு கும்பல் ஒன்று தமது கைவரிசையை காட்டியுள்ளது. வீட்டின் அடுப்பு புகட்டினால் உட்புகுந்து, வீட்டாரினை மிரட்டி அலுமாரியில் இருந்த கிட்டத்தட்ட 30 பவுண் நகைகள், 15 ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக...

யுத்தத்தில் எட்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர் -மஹிந்த

இறுதி யுத்தத்தின்போது போராளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்களாக எட்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அங்கு நேற்று (புதன்கிழமை) பொது நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தத்தில்...

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீது தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பி அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், வாக்கு தேவைக்கு மட்டுமே தங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய சிறைக்கைதிகள் தினம் நேற்று(புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தினை தம் உறவுகளிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளனர். அவர்கள் தமது...

விக்னேஸ்வரனை சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்துகின்றனர் – சி.வி.கே. சிவஞானம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என வட மாகாண சபை அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைமைகள் யதார்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயற்பட்டிருந்தால் வடமாகாணசபையில் குழப்பங்கள் உருவாகியிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடமாகாணசபையின்...

இராணுவத்திற்கு சுகபோகம் – நாங்களோ நடுத்தெருவில்: கேப்பாப்புலவு மக்கள் விசனம்!

இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடங்களை கடந்துள்ள...

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு!

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி தலவாக்கலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது அடுத்த மாதத்துடன் காலாவதியாகின்றது. அதை புதுப்பிப்பதற்குரிய பேச்சுவார்த்தைககள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமானாலும் முதல் சுற்றுப்...

முல்லைத்தீவு வாள்வெட்டு: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு தாக்குதல்...

திலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல்...

சினிமா பாணியில் பொதுச் சந்தையை 45 நிமிடங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரவுடிக் கும்பல்!!

கிளிநொச்சி பொதுச் சந்தையினை நேற்றையதினம் (12-09-2018) மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ரவுடிக்கும்பல் ஒன்று. சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய...

வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த...

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

புத்தரின் உருவம் பொறித்த அலங்காரம் அமைப்புக்கொண்ட சேலை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண்...

என்னை சந்திப்பதற்கு பிரபாகரன் விரும்பவில்லை – மஹிந்த

விடுதலை புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை...
Loading posts...

All posts loaded

No more posts