Ad Widget

விக்னேஸ்வரனை சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்துகின்றனர் – சி.வி.கே. சிவஞானம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என வட மாகாண சபை அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைமைகள் யதார்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயற்பட்டிருந்தால் வடமாகாணசபையில் குழப்பங்கள் உருவாகியிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணசபையின் அண்மைக்கால நிலமைகள் குறித்து நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளேன். முதலமைச்சருக்கும் எனக்கும் இடையில் அதிகளவான கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறும் ஒருவன் வட மாகாணசபையில் நான் மட்டுமே.

ஆனாலும் தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கும் எனக்குமிடையில் நல்ல நட்பு இருக்கிறது. முதலமைச்சர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கின்றது.

மேலும் இன்று வட மாகாணசபை இருக்கும் நிலையில் தமிழர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது. தங்களை தாங்களே ஆளும் வல்லமை கிடையாது. என பல்வேறு அவபபெயர்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது“ என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Posts