- Monday
- May 11th, 2026
கிளிநொச்சி பொதுச் சந்தையினை நேற்றையதினம் (12-09-2018) மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ரவுடிக்கும்பல் ஒன்று. சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த...
புத்தரின் உருவம் பொறித்த அலங்காரம் அமைப்புக்கொண்ட சேலை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண்...
விடுதலை புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை...
வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம்...
நுண்கடன் பெற்ற பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக பாலியல் சலுகைகள் வழங்குமாறு சில கடன் சேகரிப்பாளர்கள் நிர்ப்பந்திப்பது குறித்து தனது கவனத்துக்குக் கொண்வரப்பட்டுள்ளதாக ஐ.நாவின் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகளுக்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கியே (Juan Pablo Bohoslasky ) இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 3ஆம் திகதி இலங்கை...
பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர...
காங்கேசன்துறை பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் குறித்த எழும்புக்கூடு இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக் கூடு ஆணினுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதியேனும் நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாட்டிலேயே மும்முரமாக ஈடுபட்டு...
வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும், கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் எனவும் கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. கட்சி...
யாழில் நடைபெற்று வரும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாத நுழைவு சீட்டுக்களை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.முத்திரை சந்திக்கு அருகிலுள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது குறித்த களியாட்ட...
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வைத்தியாலைக்கு சொந்தமான காணியிலிருந்தே குறித்த சீருடைகள் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள்...
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தியே வைத்தியர்கள் சார்பில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிக வெப்ப...
வடமாகாணசபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு அக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது. வடமாகாணசபையின் 131வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணசபையின்...
வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, "வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம்...
கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து...
இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG) ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு...
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட.மாகாண சபையின் 131 வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால்...
யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார். உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
