- Monday
- May 11th, 2026
வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (17.09.2018) காலை வழங்கி வைத்துள்ளார். நிர்வாக பிரதிப்பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமயில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன முதலமைச்சர் அமைச்சின் செயலாளர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பொங்குதமிழ் நினைவுத் தூபி திறக்கப்பட்டது. திரை நீக்கப்பட்ட தும் தமிழீழ விடுதலைப் புலி களினால் வெளியிடப்பட்ட தேசிய கீதமான ”ஏறுது பார் கொடி ஏறுதுபார்” என்கிற பாடல் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து புலிகளின் எழுச்சிக் கீதங்களும் ஒலிபரப்பப்பட்டன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம்...
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 72 ஆவது நாளாக நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடூரமாக காணப்படுவதாகவும்,...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மறைத்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றதெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன காலதாமதமாகின்றதென...
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் 134 பேருக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. சாரதிகள் 42 பேர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 73 பேர்,மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேர் உள்ளிட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
வவுனியாவில் அரச பேருந்துகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டன. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து சாரதி நடத்துனருக்கும் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களுக்கிடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டது. அதனையடுத்து அரச பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன், தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் கைது செய்யபட்டுள்ளனர். குறித்த தாக்குதல்...
கிளிநொச்சி- கரடிப்போக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதன்போது விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறுகண்டியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வான் ஒன்று, பண்ணைப் பகுதியில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி இன்று (17) திங்கட்கிழமை காலை திரைநீக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து நடத்தும் “தமிழமுதம்” மாபெரும் தமிழ் விழாவின் ஒரு அங்கமாகவே “பொங்குதமிழ்” தமிழரின் வரலாற்று பதிவு நிகழ்வின் நினைவுத் தூபி திரைநீக்கம் செய்யப்பட்டது. ஈழத்தமிழர்...
பாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட சிற்றூண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகம் இன்று முதல் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளுக்கு விநியோகிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுமக்கள் 1960 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதிக்கான சான்றிதழ்களை ஐந்து நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்சமயம்...
நெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் தொடருந்து விபத்தில் உயிரழந்தனர். வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் தொடருந்துடன் கார் மோதுண்டமையால் இந்தப் பெரும் துயரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்துடன் சிறிய கார் ஒன்று, மோதுண்டு விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட...
வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும்...
சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படியும், சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு பணித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிவனடிபாதமலை (சிவனொளி பாத மலை) எனும் தமிழ் பெயர் நீக்கப்பட்டு...
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பு பாரதூரமாக சென்ற நிலையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த அந்தோனிமுத்து, அவருடைய மகன் அமல்ராஜ் ஆகியோர் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். வடமராட்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வின்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியின் மக்களுக்கான உத்தியோகபூர்வ சேவைகள்’ வேலைத்திட்டத்தின் ஊடாக பல பொது சேவைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, உத்தியோகபூர்வமாக பதிவுத் திருமணம் மேற்கொள்ளாத 18 தம்பதிகளுக்கு அரச செலவில் பதிவுத் திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன. கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உரிய முறையில் பதிவு திருமணத்தை மேற்கொள்ளாமல் வாழ்ந்து...
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்புக்கு நாளை (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது...
குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பை மீறி பாதுகாப்பு பிரிவின் தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பாக, கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்துள்ளது. ஜனாதிபதிக்கு தெரியாமல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டிற்கு பயணிக்க வாய்ப்பில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலமொன்றை...
தமிழ் பிரதிநிதிகள் தங்களை கண்டுக்கொள்ளாத நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் இதற்கு முன்னர்...
போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூலம் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவம் மீது குற்றம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவன் ஆலயத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மதில் கட்டுவதற்காக மண்ணை தோற்றியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார்...
Loading posts...
All posts loaded
No more posts
