வவுனியாவில் அரச பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பு!!

வவுனியாவில் அரச பேருந்துகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து சாரதி நடத்துனருக்கும் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களுக்கிடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டது.

அதனையடுத்து அரச பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன், தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தனியார் பேரூந்தின் உரிமையாளரொருவரே சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவரே இலங்கை போக்குவரத்து சபையினரை தாக்கியதாக தெரிவித்தும் குறித்த உரிமையாளரை கைது செய்யுமாறு கோரி இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

Related Posts