யுத்தத்தில் எட்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர் -மஹிந்த

இறுதி யுத்தத்தின்போது போராளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்களாக எட்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அங்கு நேற்று (புதன்கிழமை) பொது நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தத்தில் 40 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டதாக கூறப்படுவதானது, போலியான தீங்கிழைக்கும் வகையிலான பிரசாரமாகும்.

இறுதி யுத்தத்தின்போது கிழக்கில் சிக்கித்தவித்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட போரானது விடுதலை புலிகளுக்கு எதிரானதே தவிர, தமிழ் சமூகத்தினருக்கு எதிரானது அல்ல.

மேலும், சர்வதேசத்தினால் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை” என்றும் குறிப்பிட்டார்.

Related Posts