வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூபா 10 லட்சம் இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 லட்சம் ரூபா நிதியை இழப்பீடாக உடனடியாக வழங்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 லட்சம் ரூபா வரை காப்பீட்டுப் பணம் வழங்குமாறும் அவர் இதன்போது அறிவுறுத்தினார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு!- வதந்தியை நிராகரித்தது பரீட்சை திணைக்களம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெளியீடு குறித்து ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது. பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையிலேயே பரீட்சை திணைக்களம் அதனை மறுத்துள்ளது. எவ்வாறாயினும், பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினத்திற்கு முன்னர் வெளியாகும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை...
Ad Widget

முல்லைத்தீவில் சிறுவனைக்கொண்டு குளோரின் கரைத்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ள நீர் கலந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்காக குளோரின் கரைப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக இரு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். குறித்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த 9 வயது...

மத முரண்பாடுகள் வேண்டாம் -றெஜினோல்ட் குரே

அனர்த்தங்களின் போது ஒன்றிணைந்து செயற்படும் மக்கள் அதன் பின்னர் இனமத வேறுபாடுகளைக்கூறி முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக கூறிய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இதன் காரணமாக மத முரண்பாடுகள் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் கலாசார திணைக்களம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒளிவிழா மன்னார்...

வெள்ள பாதிப்புகள் குறித்து கிளி.அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட இன்று (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கிளிநொச்சிக்கு சென்றுள்ள பிரதமர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில்...

அச்சுவேலியில் தீ விபத்து: பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!!

அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் இன்று அதிகாலை(28.12.2018) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது, இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு...

அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்; இனி மோசமானவர்களே மாகாணசபைக்கு வருவார்கள்: சி.தவராசா!

இனிமேல் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமில்லை. அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்டேன் என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று இதனை தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். இதில்- சி.தவராசாவை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க ஈ.பி.டி.பி திட்டமிடுகிறதா என செய்தியாளர் ஒருவர்...

வட்டுக்கோட்டையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து அதே பகுதியைச்...

இரணைமடு குளம் புனரமைப்பு – பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது!

இரணைமடு குளம் புனரமைப்பு செய்யப்பட்டதில் பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவும் , அதனால் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஈ. பி.டி.பி கோாியுள்ளது. இது குறித்து இன்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, அக்கட்சியின் செயலாளா் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி...

தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு!- மக்கள் அவதி

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும்...

பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு சட்ட கல்வியே தீர்வு – அமைச்சர் விஜயகலா

நாட்டில் பெண்கள் சிறுவறுகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக சட்ட கல்வியை மாணவர்களுக்கு அடிப்படை கல்வியாக்கி பாடவிதானத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். இதனை கொண்டுவருவதன் மூலம் தரம் 5 இல் இருந்து உயர்தர மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வினை கொண்டுவர முடியும் என்றும், இதனால் தேசிய...

எதிர்கால சந்ததியினரை போதையிலிருந்து பாதுகாக்க தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகம் நேற்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியினால் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரான கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சட்டவிரோத...

சீரற்ற காலநிலை: வடக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் 36 ஆயிரத்து 594...

போர் குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்பு கூறலை இலங்கை மறைக்கின்றது: பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடும் யூ.என்.டிஸ்பெச் இணையத்தளம், கேட் க்ரோனின் பார்மன் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச்சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு...

மதுபானசாலையை அகற்ற கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் மதுபானசாலையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இன்று காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை அமைதி வளியில் முன்னெடுத்துள்ளனர். பிரதேச செயலகம் முன் ஆரம்பித்த குறித்த...

போதையில் காரினை செலுத்தியவர் மோதி இளைஞன் உயிரிழப்பு!

வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோப்பாய்வெளி ஊடாக கைதடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை அவ்வழியே வேகமாக சென்ற மோட்டார் கார்...

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி: வடக்கு ஆளுநர் நடவடிக்கை

சாவகச்சேரி பிரதேச சபையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்களுக்கும், ஆளுநருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் வாமதேவன் தலைமையிலான பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும்...

கிளிநொச்சி வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இக்கூட்டத்தில், அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், மக்களை பாதுகாப்பது மற்றும் முகாம்களில் தங்கியுள்ளோர் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்!!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மயில்வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 26.12.2018 நேற்றையதினம் வெள்ள நிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்... கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபட முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம்...
Loading posts...

All posts loaded

No more posts