- Saturday
- May 9th, 2026
யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கில் செய்தியாளர்களைச் சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த செய்தியாளர் சந்திப்பில், சுமந்திரன் உள்ளிட்ட...
பேருந்து கட்டணங்களின் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய நுாற்றுக்கு 4.2 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 12 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணம் அவ்வாறே...
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,...
சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பிரதான சுடரை துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் தீபங்களை ஏற்றி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலித்தனர்.
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால், மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கிளிநொச்சியில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், காலநிலை நேற்று ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்கு திருப்பினர். எனினும், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மழை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனால், ஏற்கனவே...
வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை குளத்தின் வான் பாய்ந்து வருவதனாலும் பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது....
இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு...
சாவகச்சேரியில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை மீள்சுழற்சி செய்வதற்கான நிலையம் அமைக்க சாவகச்சேரி நகர சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு அண்மையில் வருகைதந்த வேள்ட் விஷன் அதிகாரிகள் நகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி செயற்பாட்டை பார்வையிட்டிருந்தனர். இதன்போது தரம் பிரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி...
இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது...
வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் வீடு திரும்பும்போது இழப்பீடுகளை வழங்க துரித திட்டமொன்றை முன்னெடுக்குமாறு, வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு அவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அனைத்து அரச...
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில், இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை...
தற்போதைய மனிதனைவிட புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின்போது எதிர்காலத்தில் தோன்றினாலும் அவனாலுங்கூட இயற்கையை ஒருபோதும் வெல்லமுடியாது. இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும். எங்கள் தலைமுறையில் நாங்கள் சந்தித்த மிகக்கொடிய பேரனர்த்தமான கடற்கோளின் நினைவு நாளில் இயற்கையோடு இசைவுற இணைவோம் என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம்...
சீனியின் அளவின் அடிப்படையில் சோடா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு விதிக்கப்படும் வரி மீளவும் அதிகரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன அறிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனம் நேற்று இடம்பெற்றது. அதில் ராஜித சேனரட்ன, மீளவும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை சுகாதார அமைச்சில் இன்று பொறுப்பெடுத்தார். கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் சுகாதார அமைச்சர் ராஜித...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில், நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். அதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் பெற்றோல் ஒக்டேன் 95 எரிபொருள் ஒரு லீட்டர் தலா 10...
பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராகச் சென்ற இருவரை பளை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பளை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் செல்வதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த...
நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாகவே இருப்போம் என நினைத்துவிட வேண்டாம். நாட்டுக்கு விரோதமான செயற்பாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பை வெளியிடுவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இன்று எமது...
கொழும்பு அரசின் 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே, நோயாளர் பகுதியில் கமரா வசதியுடைய நவீன அலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைநேரத்தில் நவீனவகை அலைபேசி களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில்...
நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக போராடி தோற்றுப் போன முன்னாள் தமிழ் தலைவர்களுக்குப் பின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனாலும் துரதிஸ்ட வசமாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியாக...
நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் (குறிப்பாக 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில்) இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது...
Loading posts...
All posts loaded
No more posts
