இம்மாத இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – இரண்டாவது முறையாக உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி!

யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்திற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறுகையில், “விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட...

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுவந்தவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு வரப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன. போதை கலக்கப்பட்ட...
Ad Widget

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று!

பிரதான எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கவுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்றம் அமர்விலேயே இவ்விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும், எதிர்கட்சிகளுக்கிடையில்...

முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொள்ளும்படி வாசலில் நின்று வீறிட்டு அழுத முதியவர்!!

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது. வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை...

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக தவராசா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சிங்களத்தில் தண்டப்பத்திரம்(தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,...

எரிபொருள் சூத்திரம் நாளை முதல் மீள நடைமுறைக்கு வரும்!

எரிபொருள் விலைச் சூத்திரம் நாளை 21ஆம் திகதி முதல் மீளவும் நடைமுறைப்படுத்தப்படு என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள். விலை சரிவடைந்துள்ளதால் இலங்கையிலும் அதன்விலை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு அரசின் எரிபொருள் விலைச் சூத்திரம் கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த்து. இதன்மூலம் ஒவ்வொரு மாதம்...

புதிய அமைச்சரவை விபரம்

புதிய அமைச்சர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர்...

வடமராட்சியில் தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளதென குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்மித்த பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (புதன்கிழமை) மாலை ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில், ‘தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது,...

மூதாட்டியை தாக்கிக் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று (19) அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி, அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை...

உத்தரதேவியின் பரிச்சார்த்த பயணம் நிறைவு – வெள்ளியன்று சேவை ஆரம்பம்

இலங்கை ரயில்வே திணைக்களமானது இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புதிய தொடருந்துது பரிச்சார்த்த பயணமாக நேற்று மாலை யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசந்துறை- கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இந்தத் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தரதேவி தனது சேவையை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க உள்ளது. அதற்கான பரிச்சார்த்த பயணம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பமாகியது புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வு

புதிய அமைச்சரவையின் சத்திப்பிரமாண நிகழ்வு சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியது. பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பதவியேற்பு நிகழ்வுகளுக்கு செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோதும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது...

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்

முல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையிலேயே குறித்த ஸ்கூட்டர் வகையினைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியமை தொடர்பில்...

தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு

வலி.வடக்கு, தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாமென அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலி.வடக்கு தையிட்ட ஆவளைப் பகுதியில் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின்...

காணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது – இராணுவ தளபதி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படும் காணிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு விடுவிக்கப்படும் காணிகள் முழுமையான பரிசோதனைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறினார். வடக்கு கிழக்கு...

யாழில் இந்திய பெண் தற்கொலை!

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புடவை வியாபாரத்தின் நிமித்தம் தனது கணவருடன் வருகை தந்திருந்த இந்தியப்பெண்ணே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

இராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச...

சபாநாயகரின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது: சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எதிர்க்கட்சி தலைவர்களாக இருவர் உள்ளனர்....

கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகி 11 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல்...

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் – ரணில்

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகளை தோற்கடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள். இதற்காக...

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சம்பந்தன்

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
Loading posts...

All posts loaded

No more posts