எரிபொருள் சூத்திரம் நாளை முதல் மீள நடைமுறைக்கு வரும்!

எரிபொருள் விலைச் சூத்திரம் நாளை 21ஆம் திகதி முதல் மீளவும் நடைமுறைப்படுத்தப்படு என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள். விலை சரிவடைந்துள்ளதால் இலங்கையிலும் அதன்விலை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு அரசின் எரிபொருள் விலைச் சூத்திரம் கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த்து. இதன்மூலம் ஒவ்வொரு மாதம் 10ஆம் திகதியும் எரிபொருள்களின் விலை மாற்றமடைகிறது.

ஒக்டோபர் 26ஆம் திகதி திய பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் மகிந்த நியமிக்கப்பட்டதையடுத்து அவரது அரசின் கீழ் எரிபொருள் விலைச் சூத்திரம் நவம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீளவும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர, எரிபொருள் சூத்திரத்தை மீள நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Posts