Ad Widget

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சம்பந்தன்

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை இல்லை, அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை.

கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் பெரும்பான்மையை நிலைநிறுத்துகின்ற தீர்மானமாக இதனைக் கருதுகின்றேன்.

அத்தோடு பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதாகவும்” குறிப்பிட்டார்.

Related Posts