புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து அங்கஜன் சந்தேகம்!

குடும்ப பிரச்சினை காரணமாக யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் குறித்த சந்திப்பு நேற்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது. செருக்கன் பகுதியில் வாழும்...
Ad Widget

கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்க முடியாது – சீ.வீ.கே

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரது அலுவலகத்திலநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் வழங்கப்பட்டவையாக கல்வி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற...

ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு கிளை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

ஐ.நா.வின் கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வு – சிவாஜிலிங்கம்

இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வியைக் கொடுத்துள்ளதுடன், யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை...

ஏப்ரல் இறுதிவரை மின்வெட்டுத் தொடரும் – மின்சார சபை விளக்கம்

ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியாகும் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்துக்கு குறைவடைந்துள்ளது. அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியைக் கொண்டு மின் வழங்கலை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவிப்பு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 தினங்களுக்கு இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவித்துள்ளனர்.

எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம் – மாவை

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ராஜபக்ஷ அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம்...

வடக்கில் அதிகரிக்கும் விபத்துக்கள் குறித்து நாடாளுமன்றில் கருத்து!

நாட்டில் அதிகரிக்கும் விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை ஒன்று அவசியம் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த குழுநிலை...

யாழில் மாணவர்களைக் குறிவைக்கும் விபச்சார விடுதிகள்!

யாழ்ப்பாணத்தின் கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதிகளில் ஹெரோயின், கஞ்சா, மதுபான விற்பனை மற்றும் விபச்சாரம் போன்ற விடயங்கள் அதிகம் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்தே விபச்சாரம் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22ஆம் திகதி ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைதாகி, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில்...

குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். சிறுவன், கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர்...

மரண வீட்டில் வாள்முனையில் கொள்ளை!

அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 21 வயதாக நாகராசா நிதர்சன் என்பவர் உயிரிழந்திருந்தார்....

வடக்கில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!!

வட மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வவுனியாவில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. இலங்கையில்...

தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் – தவராசா

வடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் பல...

வடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்!

அண்மையில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குப்பைகள் வீசுவதாக மன்னார் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் – யாழ்ப்பாண பிரதான வீதி, நாவற்குளம், திருக்கேதீஸ்வரம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும் இராணுவ முகாம் மற்றும் இராணுவப் பகுதிகளில் உள்ள குப்பைகளை...

மின்சார தடை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு – மின்சார சபை

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் மின்சா தடை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகவுள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. நாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை ஜனாதிபதி விரைவில் வெளியிடுவார்: வடக்கு ஆளுநர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவார் என, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் தனியார் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மனிதாபிமான நாகரீக பிரச்சினையாகக் காணப்படுகிறது. எனவே, இதிலிருந்து ஒருபோதும்...

கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் தாராளம்!!!

யாழ்ப்பாணம் கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாக உள்ளது என கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தனர். கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்த கோப்பாய்...

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி!

அல்லைப்பிட்டி யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது-21) என்பவரே உயிரிழந்தார். மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து...

அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆறாயிரம் இடைக்கால நிதி உதவியை வழங்குவதற்கு பதிலாக ஆகக்குறைந்தது 20 இலட்சம்...
Loading posts...

All posts loaded

No more posts