- Friday
- May 8th, 2026
செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டுள்ளதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் அப்பகுதிகளில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை...
நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் அவதானத்துடன்...
நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழை இல்லாமை காரணமாக நாடுமுழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் பகல் வேளையில் மூன்று மணிநேரமும் இரவு வேளை ஒரு மணி நேரமும் நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. லக்ஸ்பான, மேல்...
தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22)மதியம் உணவருந்திய பின் அந்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார். இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில்...
கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால் முதல் நாளிளேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும் தொண்டைக்கும், பாதிப்பு ஏற்படும். குடும்ப சுகாதார பணியகத்தின்...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கமபத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி பேருந்துக்குள் அகப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர்...
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தில்...
மாத்தறை -பெலியத்தைக்கிடையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த புதிய ரயில் பாதை 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுவரும் நிலையில், ரயில் பயணம் எதிர்வரும் தமிழ் -சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 27 கிலோமீற்றர் நீளமான இந்த ரயில் பாதை, மணித்தியாலத்திற்கு 120கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடியவை. சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப் பாதையும்...
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று முன்தினம் (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார். காலையில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள 40/1 என்ற புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மசிடோனியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து குறித்த பிரேரணையை கொண்டு வந்திருந்தன. இதற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. இந்த பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் எதுவும் எதிர்ப்பு வெளியிடாத நிலையில் வாக்கெடுப்பின்றி...
யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில்நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த...
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, இதனை தெரிவித்துள்ளார்....
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பேருந்துகள் இன்று(வியாழக்கிழமை) நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து கலா ஓயா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளாதால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் கோரியுள்ளார். எனக்கு வந்த அச்சுறுத்தலில் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரத்துக்குள் ஏற்பட்டுள்ள அத்துமீறல்களைத் தடுக்க கூடுதலான அக்கறை எடுத்து செயற்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது...
2019.03.19 ஐ.நா மனித உரிமைகள் பேரவை கயேந்திரகுமார் பொன்னம்பலம் அமர்வு: 40 விடயம்: 08 பொது விவாதம் ஒரு மக்கள் குழுமமானது, ஐ.நா பட்டயத்தின் பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ழ்சிதிட்டம்...
வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா தெரிவித்தார். 252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை...
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் படகு இறங்குதுறை அகலிக்கப்பட்டு அமைக்கப்படுவதுடன் ஆலயத்துக்கு வீதியும் அகலிக்கப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் 19 ஆம் திகதி நடந்த வணிக மாநாடு தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து குறித்த கும்பல் அந்தக் காரின் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வேம்படி விதியில் நேற்று...
மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனீவா சென்றுள்ள அவர்,நேற்று (புதன்கிழமை) அமர்வினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத்...
Loading posts...
All posts loaded
No more posts
