Ad Widget

வடக்கில் அதிகரிக்கும் விபத்துக்கள் குறித்து நாடாளுமன்றில் கருத்து!

நாட்டில் அதிகரிக்கும் விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை ஒன்று அவசியம் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகாலையிலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்த விபத்துக்கள் ஒரு விடயத்தினை சொல்லிச் செல்கின்றது.

எனவே இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்குரிய விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இரவு மற்றும் அதிகாலையில் அதிகளவான போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts