Ad Widget

தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் – தவராசா

வடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் பல பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரப் பகிர்வின் விளைவுதான் இந்த மாகாண சபை.

எனவே தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமக்கு அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றிபெற்றனர்.

ஆனால் தற்போது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினை தாங்கள் வரவேற்பதாகவும் கூறுவது வியப்பாக உள்ளது” எனவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Related Posts