படை முகாம்கள் எவையும் அகற்றப்பட மாட்டாது – இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத்...

வடக்கில் இராணுவ கெடுபிடியை வன்மையாக கண்டிக்கின்றோம் : மாவை

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கலந்துரையாடுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...
Ad Widget

ஊடகவியலாளர் மீது அரசியல் கட்சியை சேர்ந்தவர் தாக்குதல் – பொலிஸில் முறைப்பாடு

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரப்பெரியகுளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு காயங்களுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பாடு...

புத்தக திருவிழா யாழில் ஆரம்பம்!

யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்...

நல்லூரில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தண்டம்!!

வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி...

தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சரத் பொன்சேகா

தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் நேற்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன....

கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து பிரதமர் ரணில் முக்கிய பேச்சு

பலாலி விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற...

கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் மகிந்த தீர்வை பெற்றுத் தருவார் – யாழில் திஸ்ஸ

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக என்னைத் தற்போது மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்துத் தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவேண்டும்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதன் மூலமே...

மோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்!!

ஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் விதத்தில் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் இந்திய விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி-...

கோட்டா ஜனாதிபதியானால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படும்!!

ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் தங்களின் அவல நிலைக்கு அவரே காரணமென்றும் எனவே அவர் ஜனாதிபதியாக வருவதை ஒருபோதும் தாம் விரும்பவில்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக...

இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் அறிவர் – சவேந்திர சில்வா

இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப்.மேஜர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “சர்வதேசத்தினர் போர்க்குற்றங்கள் தொடர்பாக தற்போது கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டுக்கென,...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு!

தமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

அவசரகால சட்டம் நீக்கம் – சோதனை, கைது, தடுத்து வைத்தலுக்கு பாதிப்பு இல்லை!! – பொலிஸ்

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை, நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின்...

சர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மாறாக திறக்கப்படுமாயின் அதற்காக போராட்டம் நடத்துவோமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று...

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- அலியாவலாய் கடல் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர் கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து, அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியொன்றை அவர்கள் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த பொதியினை சோதனைக்கு உட்படுத்தியப்போது,15 கிலோ கிராம்...

தமிழர்களின் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிபதியிடம் எடுத்துரைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனுடன் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது....

அவசரகால சட்டத்திற்கு பதிலாக முப்படையினருக்கும் தேசிய பாதுகாப்பு அதிகாரம்!!!

அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் விதமாக புதிய வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்று (23) நள்ளிரவில் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு ஜனாதிபதியினால் முப்படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் – விக்கி நம்பிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக்னேஸ்வரன்...

கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவுள்ளது எழுக தமிழ் – சுரேஸ்

யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நிகழ்வை நல்லூரில்...
Loading posts...

All posts loaded

No more posts