சர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மாறாக திறக்கப்படுமாயின் அதற்காக போராட்டம் நடத்துவோமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் பிரதிநிதிகளும் இவ்விடயத்துக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில், யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

Related Posts