ஏப்ரல் மாத ஓய்வூதியம் பற்றி ஓய்வூதியர்களுக்கு அரசின் அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 2, 3 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, நிதி அமைச்சின் சார்பில் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்விரு தினங்களில் பெற முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6ஆம் திகதி அவர்களுக்கு அதனை வழங்கி முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இடம்பெற்ற...

பட்டதாரி பயிலுநர்கள் இன்று திங்கட்கிழமை அறிக்கையிடுவது அவசியமில்லை!!

பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்கள் மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கடமை நிலையங்களில் அறிக்கையிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்ட விதிகளின் அடிப்படையில் மறு அறிவித்தல்வரை பட்டதாரி பயிலுநர் அறிக்கையிடுவது அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பட்டதாரி...
Ad Widget

மக்களுக்கு நிவாரணமளிக்கும் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும்!!

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும். எனவே தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், பொலிஸார் மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கோரி நிற்கிறது. இது...

கோரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி நேற்றையதினம் உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மாரவிலயைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடத்தை...

யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வில்லை- ஏனைய மாவட்டங்களில் நாளை தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி...

யாழ்ப்பாணம் மறியல்சாலையிலிருந்து 110 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!!

யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்கள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபர்களை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த...

இலங்கையில் தமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்புக் கிடைக்கும் -மாவை

தமிழர்கள் எட்டுப் பேரை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தபாயவின் செயலானது, தமிழினத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கெதிராக எக்குற்றத்தையும் யாரும் செய்யலாம், இனத்தையே அழித்துவிடலாம் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. அதனை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்...

யாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டது. தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை...

மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு- யாழ். அரச அதிபர்

யாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மீன்பிடியில்...

வவுனியாவில் ஆராதனை நடத்திய 20 பேர் கைது!

வவுனியா, செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்று ஆராதனை நடத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிக்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில்...

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், முகக்கவசங்கள், பரிசோதனைக் கருவிகள், சனிட்டைஸர்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெரும் எண்ணிக்கையில் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள மருத்துவ மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான 1000 பாதுகாப்பு அங்கிகளை சீனா மேர்சன்ட்ஸ்...

நகரசபை உறுப்பினர் உள்பட நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது!

கொடிகாமம் பொலிஸ் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் பொலீசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வரணிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள்...

கொரோனா சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில்...

கொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும்...

கோரோனா பரிசோதனையை யாழ்.பல்கலை மருத்துவபீடத்தில் முன்னெடுக்க ஏற்பாடு!!

கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனலைதீவில் உள்ள ஒருவருக்கு கோரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம்...

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய், லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த...

வடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி!

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கிவைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்தச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து குமார்...

தாய்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்!

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருவதை முழுமையாக...

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செய்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – UNRC

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி தங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்த...

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய 25 பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading posts...

All posts loaded

No more posts